நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Tuesday 28 June 2016

மழையில் நனைந்து வந்த மழலை ராஜா ராம்!



கீரப்பாக்கம் மலைக்கோயில் பற்றி ஸ்ரீ சாயி தரிசனம் இதழில் படித்தவுடன் பாண்டிச்சேரியில் இருந்து தனது மோட்டார் பைக்கிலேயே பாபாவை தரிசிக்க வந்திருக்கிறார் ராஜாராம் என்ற இளைஞர்.
அவர் வரும்போது நல்ல மழை. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வந்தபோது, மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தபடியால் திரும்பச் சென்றுவிட நினைத்திருக்கிறார்.
அந்த வழியாக வந்த ஒருவர் ராஜாராமிடம் எங்கு செல்கிறீர்கள்?” என விசாரித்து, “நானும் அங்குதான் செல்கிறேன், போகும் வழியில் பாபா ஆலயத்தைக் காட்டிவிட்டுச்செல்கிறேன்என்று கூறி பாபா லயம் வரை வந்து வழிகாட்டிவிட்டு, வேறு வழியாக சென்றுவிட்டதாகக் கூறுகிறார் ராஜா ராம்.
கொட்டும் மழையில், தனிமையில், இருளில் தனது பாபா இருப்பதைப் பார்த்த அவருக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. பாபாவுடன் சிறிது நேரத்தைக் கழித்துவிட்டு பாண்டிச்சேரி திரும்பியிருக்கிறார்.
தன்னுடைய பகுதியில் கோயில் அமைத்துள்ள பஞ்சநாதனுடன் பாபா மாஸ்டரை சந்தித்து, கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்காக டியூப் லைட்டுகள், மின் விசிறி ஆகியவற்றை வாங்கி கீரப்பாக்கத்தில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பஞ்சநாதனும், பாபா மாஸ்டர் அருணாசலமும் இதை கீரப்பாக்கம் எடுத்து வந்தனர். மலைக்கோயிலில் பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ராஜாராம் காலை நேரமே வந்திருந்து பெருமாளை பக்தர்களோடு எடுத்து அவருடைய ஸ்தானத்தில் அமர்த்திய பிறகு பாபாவுக்கு அபிஷேகம் செய்து கிளம்பினார்.
விழுப்புரம் செல்வதாக இருந்த பயணத்தை நேரம் கருதி கேன்சல் செய்துவிட்டு, திண்டிவனம் வழியாக சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது பாபா மாஸ்டர் போன் செய்தார். பாண்டியன் என்ற தம்பி உங்களுக்காக காத்திருக்கிறார். விழுப்புரத்திற்குச் செல்லுங்கள்என்று உத்தரவு போட்டார். வேறு வழியின்றி புறப்பட்டேன்.
திண்டிவனத்திற்கு அருகிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தைச் சுற்றி பாண்டியன் ஊரைத்தேடி கண்டுபிடித்துச் சேரும்போது இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. இவ்வளவு தூரம் வர வேண்டுமா எனத் தோன்றியது. ஆனால் பாபா எதற்காகவோ தனது பக்தனைத் தேடி அலைய வைக்கிறார் எனப் புரிந்ததால் எதையும்சொல்லாமல் கிளம்பிச் சென்றேன்.
இந்தப் பாண்டியனிடம்தான் நான் சீரடிக்குப்போன போது கொய்யாப்பழத்தை வெட்ட கத்தியை எடுத்துவருமாறு சொல்லி, அதற்கு அபராதமாக பதினெட்டாயிரத்தை பாபா பிடுங்கிக்கொண்டார்.  எனது தப்புக்காக பதினெட்டாயிரத்தோடு விட்ட பாபா, பாண்டியனுக்கு தொண்ணூறு ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டாராம். எப்படி என்பதை கேளுங்களேன்
பாண்டியன் சென்னைக்கு வந்ததும் வழக்கமாக தனது டிரைவர் வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
பாண்டியனுக்கு எந்த சிறாய்ப்பும் கிடையாது. கார் விபத்துக்குள்ளானதும் அவருடைய மனத்தில் இதற்குக் காரணம் தான் சீரடிப் பயணத்தின் போது கத்தியை களவாடியதுதான் என்று தோன்றியிருக்கிறது. அதை உணர்ந்துகொண்டதும் பாபாவிடம் மன்னிப்புக் கேட்டாராம்.
என்னிடம் இந்தத் தகவலைச் சொன்னதும் கவலைப்படாதே -  பாபா என்னிடம் வசூலித்ததை திருப்பித் தந்துவிட்டார், உனக்கும் நிச்சயமாகத்தருவார் என்றேன்.
அவரது வீடு முழுக்க கிராமத்து வாசனையோடு இருந்தது. அந்தக் காலத்து பானைகள், கிராமத்தில் பயன்படுத்திய நெல் கொட்டிவைக்கும் சால், உறை போன்ற பொருட்கள் இருந்தன. உள்ளே நுழைந்ததும் தெய்வீகம் வரவேற்றது;
பையன் நல்ல பக்தியோடு இருக்கிறார் என்பது புரிந்தது. சற்று நேரம் மெய்மறந்து அமர்ந்திருந்தேன். அதன் பிறகு அவருடைய இல்லத்தில் பாபாவின் உதியைத் தெளித்து ஆசீர்வதித்துவிட்டு, அவர் நடத்துகிற கடையிலும் பாபா உதியைக்கொட்டி ஆசீர்வதித்துவிட்டு வந்தேன்.
என்ன வேண்டும்? எனக் கேட்டேன்.
குழந்தை பாக்கியம் வேண்டும்என்றார் பாண்டியன். மனம் உருகியது.
இதற்காகத்தானே பாபா இவ்வளவு தூரம் அலையவிட்டார். இந்த ஆண்டு உனக்கு அது  வாய்க்கும் எனக் கூறிவிட்டு வந்தேன்.
நம் மூலமாக பக்தர்கள் நலனைக் கருதி உதியை விநியோகிக்கும் பாபா, இவ்வளவு தூரம் அலையவிட்டு அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றதும் இதன் காரணமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இவருக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment